ஏழைகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 ; அதிமுக தேர்தல் அறிக்கை

சென்னை: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

TN CM

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சியில் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இ.பி.எஸ்., மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

*அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டம்

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்று திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்கள், நிலமற்ற விவசாயி கூலி தொழிலாளிகளுக்கு , அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1,500 செலுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.

 

* இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க, பிலிப்பைன்சை முன்மாதிரியாக கொண்டு எம்ஜிஆர் பெயரில் திறன் மேம்பாட்டு திட்டம் கொண்டு வரப்படும்.

 

*காவிரி – கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக துவங்க வலியுறுத்துவோம்

 

*விவசாயிகள் கடன் சுமையை தீர்க்கும் வகையில் உறுதியான திட்டத்தை செய்படுத்த நடவடிக்கை

 

*கல்வியை பொதுபட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவோம்

 

*நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

 

*தனியார் துறை வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டிற்காக நடவடிக்கை

 

*தேசிய வங்கிகளில் மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய நடவடிக்கை

 

*மதம் மறினாலும் சாதி ரீதியான இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க சட்டம்

 

*3 புதிய நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

 

*அதிகளவு மழை பெய்யும் காலங்களில் நீரை சேமித்து வறட்சி பாதித்த பகுதிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை

 

*தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவித்திட வலியுறுத்துவோம்

 

*டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை

 

*7 பேரை விடுதலை, செய்ய கவர்னருக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம்.

 

*புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்

 

*பொது சிவில் சட்டத்தை எந்த வகையிலும் செயல்படுத்தக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவோம். இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.