நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளித்த அதிமுக: புதிய நீர்ப்பாசன திட்டங்கள்

  வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகப் பகுதிகளுக்கு நீர்ப்பாசனத்திற்காகவும், குடிநீர் தேவைகளுக்காகவும் தண்ணீர் கொண்டு செல்லும் புதிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்கள் கூட்டாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிமுக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டனர். அதில், நீர் மேலாண்மை சிறப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அதிமுக வாக்குறுதி அளித்துள்ளது.   நீர் மேலாண்மை சிறப்புத் திட்டங்கள் :   1. நொய்யல் ஆற்றையும், மேற்குத் தொடர்ச்சி மலையையும் மையமாகக் கொண்டு, மேற்குத் தொடர்ச்சி மலையில் பருவ மழைக் காலங்களில் பெறப்படும் மழை, வெள்ள நீரை கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றியப் பகுதி மற்றும் மதுக்கரை வனச் சரகம் வெள்ளப்பதி பிரிவு நண்டக்கரை, முண்டன்துறை, கோவைப்புதூர், போளுவாம்பட்டி வனச் சரகம், நரசீபுரம், தாளியூர் மற்றும் இவற்றைச் சுற்றியுள்ள இடங்களில் தடுப்பணைகளை அமைத்தும், குளம் குட்டைகளில் மழை நீரை நிரப்பியும், நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்.   2. காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டிருக்கும் மோகனூர் தடுப்பணையில் இருந்து நாமக்கல் மாவட்டத்தின், மோகனூர், நாமக்கல், புதுச்சத்திரம், எருமைப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்.   3. திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில், காவிரி, அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு இணைப்பு கால்வாய்த் திட்டம். இத்திட்டத்திற்கு சுமார் 7,000 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.   இத்திட்டத்தால், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும்.   4. சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் பெருமழைக் காலங்களில் பெறப்படும் வெள்ள உபரி நீரை, நீரேற்று முறை மூலம் சேலம் மாவட்ட நதிகளில் ஒன்றான சரபங்கா நதிக்கும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கும் கொண்டுசெல்லும் திட்டம். இவற்றை அதிமுக நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளது

இத்தாலியில் நடந்தது நமக்கு வேண்டாம்; ஊரடங்குக்கு ஒத்துழையுங்கள்: ரஜினி வேண்டுகோள்

இத்தாலியில் நடந்தது நமக்கு வேண்டாம்; ஊரடங்கிற்கு ஒத்துழையுங்கள் என்று ரஜினி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா வைரஸ் பரவலில் இந்தியா தற்போது 2-ம் கட்டத்தில் இருப்பதால், அதற்குள் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்த மத்திய அரசு, திரையரங்குகள், மக்கள் கூடுமிடங்கள், ஷாப்பிங் மால்கள் போன்றவற்றை வரும் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. மேலும் மார் 22-ம் தேதி சுய ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. ஆகையால் அன்றைய தினம் பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள் என எதுவும் ஓடாது என அறிவித்து வருகிறார்கள். பிரதமர் மோடியின் இந்த முயற்சிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அரசியல் பிரமுகர்கள், திரையுலகப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். தற்போது கரோனா வைரஸால் இத்தாலியில் நடந்த பாதிப்பு நமக்கும் வந்துவிடக் கூடாது. ஆகையால் ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ரஜினி வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2-ம் நிலையில் உள்ளது. அது 3-ம் நிலைக்குப் போய்விடக் கூடாது. வெளியே மக்கள் நடமாடும் இடங்களில் இருக்கக்கூடிய கரோனா வைரஸ் 12 முதல் 14 மணிநேரம் பரவாமல் இருந்தாலே 3-ம் நிலைக்குப் போகாமல் தடுத்து நிறுத்திவிட முடியும். அதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதேமாதிரி இத்தாலி நாட்டில் கரோனா வைரஸ் 2-ம் நிலையில் இருக்கும்போது, மக்களை அரசாங்கம் எச்சரித்தது. அந்த ஊரடங்கு உத்தரவிற்கு அழைப்பு கொடுத்தது. ஆனால், அங்குள்ள மக்கள் அதை உதாசீனப்படுத்திவிட்டார்கள். அதனால் பல ஆயிரம் உயிர்கள் பலியாகிவிட்டன. அதே மாதிரி நிலை நம் இந்தியாவில் வரக் கூடாது. ஆகவே இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவருமே 22-ம் தேதி ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். இந்த கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் அவர்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக பிரதமர் சொன்ன மாதிரி 22-ம் தேதி மாலை 5 மணிக்கு அவர்களை மனதாரப் பாராட்டுவோம். அவர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் நன்றாக இருக்க ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்”.

Rajini Makkal Mandram disappointed

Tamil film actor Rajinikanth’s three “ideals” for his conceived political party has disappointed a section of his fans and office-bearers of Rajini Makkal Mandram. RMM district secretaries appeared to, albeit reluctantly, back Rajinikanth’s three-point formula of separating the government from the ruling party, giving prominence to those below 50 and not being the Chief Ministerial face of the proposed party. “Fans are disappointed, but they will come back to work for him out of love. It is the people… public who decide the government. And they seem to welcome it,” said a RMM district secretary in Chennai. Two district secretaries told The Hindu that they will “follow Rajinikanth’s path” while still hoping for a change of heart from the actor. “We are confident that the people will recognise that he is not after ‘power’ and that such a leader is needed. Even though he has made his path clear to us today, we hope that the public response will change his view,” said one of them seeking anonymity. Rajinikanth had urged his fans to go to the people and explain his position. “If there is an uprising…a wave…a revolution, then I will enter politics.” A challenging task Some feel that this is an “open challenge” for the cadres to connect more with people and ensure that the ground is prepared if he has to stake his reputation and fight elections. “He is not the kind of a person who will want to be one of the players. I reckon that if he doesn’t see the required traction on the ground, then he might see if all this is really worth it,” said an RMM office-bearer. Another district secretary said that at a meeting Mr. Rajinikanth had with them last week they were unable to convince him to give up the idea of projecting someone else as CM candidate.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம் -அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம் என அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. சென்னை,   மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.   தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அதன் விவரம் வருமாறு;-   * மதம் மாறுபவர்கள் ஜாதி சான்றிதழில் மாற்றம் இன்றி மலைவாழ், பிற்படுத்தப்பட்டோர் மதம் மாற வழிவகுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.   * வீணாகும் தண்ணீரை பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்த புதிய திட்டம்.   * காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம்.   * புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.   * நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்துவோம்.   * பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க மத்திய அரசையும், குடியரசு தலைவரையும் வலியுறுத்துவோம். என கூறினார்.

ஏழைகளுக்கு மாதம்தோறும் ரூ.1,500 ; அதிமுக தேர்தல் அறிக்கை

சென்னை: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம் என அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சியில் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான இ.பி.எஸ்., மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   *அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்று திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்கள், நிலமற்ற விவசாயி கூலி தொழிலாளிகளுக்கு , அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1,500 செலுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.   * இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க, பிலிப்பைன்சை முன்மாதிரியாக கொண்டு எம்ஜிஆர் பெயரில் திறன் மேம்பாட்டு திட்டம் கொண்டு வரப்படும்.   *காவிரி – கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக துவங்க வலியுறுத்துவோம்   *விவசாயிகள் கடன் சுமையை தீர்க்கும் வகையில் உறுதியான திட்டத்தை செய்படுத்த நடவடிக்கை   *கல்வியை பொதுபட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவோம்   *நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்.   *தனியார் துறை வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டிற்காக நடவடிக்கை   *தேசிய வங்கிகளில் மாணவர்கள் கல்வி கடனை ரத்து செய்ய நடவடிக்கை   *மதம் மறினாலும் சாதி ரீதியான இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க சட்டம்   *3 புதிய நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்   *அதிகளவு மழை பெய்யும் காலங்களில் நீரை சேமித்து வறட்சி பாதித்த பகுதிகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை   *தமிழை மத்திய ஆட்சி மொழியாக அறிவித்திட வலியுறுத்துவோம்   *டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை   *7 பேரை விடுதலை, செய்ய கவர்னருக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம்.   *புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்   *பொது சிவில் சட்டத்தை எந்த வகையிலும் செயல்படுத்தக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துவோம். இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.